புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2012


லயன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி
லயன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றன. இத்தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஹைவெல்டு லயன்ஸ் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டன் பிராட்ஹேடின் முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி, முதலில் ஆடிய லயன்ஸ் அணி வீரர்கள் சிட்னி பவுலர்களின் வேகப்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்கள். இதனால் லயன்ஸ் அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு 6-வது வீரராக வந்த சைம்ஸ் பவுண்டரிகளாக விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டார். சோலெகிலே 20 ரன்னும், பிரிடோரியஸ் 21 ரன்னும் எடுத்து சைம்ஸ்சுக்கு ஓரளவு ஒத்துழைப்பு அளித்தனர்.
51 ரன்கள் எடுத்த சைம்ஸ் எட்டாவது விக்கெட்டாக வீழ்ந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லயன்ஸ் அணி 121 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிட்னி வீரர்கள் நாதன் மெக்கல்லம், ஹசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிட்னி அணியின் தொடக்க வீரர்கள் ஹேடின் மற்றும் லம்ப் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினர். 6-வது ஓவரிலிருந்து அவர்கள் இருவரும் பவுண்டரிகளும், சிக்சர்களும் விளாசத் துவங்கினர். லயன்ஸ் வீரர்களின் பீல்டிங் மோசமாக இருந்ததை ஹேடின் மற்றும் லம்ப் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். லம்ப் சிக்சர்களாக விளாசினார்.
அவர்களின் சிறப்பான ஆட்டத்தால் சிட்னி அணி 12.3 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து 45 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது. 42 பந்துகளை சந்தித்த லம்ப் 5 சிக்சர்களுடன் 82 ரன்களும், கேப்டன் பிராட்ஹேடின் 37 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
82 ரன்கள் குவித்த மைக்கேல் லம்ப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்கான தங்க பேட் விருதையும் லம்ப் பெற்றார். தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் தொடர்நாயகன் விருது, மற்றும் கோல்டன் விக்கெட் விருது ஆகியவற்றைப் பெற்றார்.

ad

ad