புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012


மாலைப் பொழுதின் மயக்கத்திலே பட நாயகி சுபா பட்டேலா மரணம்
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சுபா பட்டேலா (21). பெங்களூரைச் சேர்ந்த இவர் மிஸ் பெங்களூராகவும் தேர்வானவர். தன்னுடைய முதல் படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடித்தவர். 

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர், பெங்களூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து 22.10.2012 அன்று இரவு அவர் திடீரென மரணமடைந்தார். 

அவரது மரணம் கன்னடம், மற்றும் தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களூரில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். 

மறைந்த சுபாவின் தந்தை டாக்டர். ராஜ்பால் புத்தேலா விஞ்ஞானியாக இருக்
கிறார். அம்மா சந்தோஷ் ஆசிரியை. ஒரு அக்கா, அவர் திருமணமாகி அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார். ஒரு தம்பி அவர் பெங்களூரிலேயே பொறியியல் படித்து வருகிறார். 

சுபா 1991ம் ஆண்டு பஞ்சாபில் உள்ள லுதினியா நகரில் பிறந்தார். சிறு வயதிலேயே அழகுடன் திகழ்ந்த அவருக்கு மாடலிங் உலகில் புகழ்பெற வேண்டும் என்பது ஆசை. பெங்களூரில் பள்ளி படிப்பை முடித்ததும் தயானந்தா கல்லூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் செய்யத் தொடங்கினார். 

2010ம் ஆண்டு நடந்த தென்னிந்திய அழகிப் போட்டியில் சிறந்த கூந்தல் அழகி பட்டம் பெற்றார். அதன் பிறகு நல்லி சில்க்ஸ், ராசி சில்க்ஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரப் படங்களில் நடித்தார். அந்த விளம்பர படங்களால் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது அழகும், நடிப்பும் பேசப்பட்டது. அடுத்து அவர் இரண்டு கன்னடப் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டது. அவருக்காக மூன்று படங்களும் காத்திருந்தது.

ad

ad