புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2012


பிரிட்டனில் இருந்து 28 பேர் இலங்கை வந்தடைந்தனர்! 32 பேர் இறுதி நேரத்தில் தரையிறக்கம்
பிரித்தானியாவில் இருந்து விசேட வானூர்தி மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த அகதிகளுள் 10 தொடக்கம் 12 பேர் வரையில் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக லண்டனில் வெளியாகும் த கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 28 புகலிடக் கோரிக்கையாளர்கள் சற்று முன் இலங்கையை வந்தடைந்தனர் 
அவர்கள் இறுதி நேரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தடையுத்தரவு கோரல் மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.
அவர்களின் வழக்குகளில் வாதாடிய சட்டத்தரணிகள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு எதிராக சுமார் 12 சட்ட அமைப்புகள் மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தன.
இந்த மனு மீதான விசாரணையை அடுத்து, தமது கட்சிக்காரர்கள் பலரை நாடுகடத்த தடையுத்தரவு பெற்றுள்ளதாக குறைந்தது மூன்று சட்டஅமைப்புகள் உறுதி செய்துள்ளன.
இலங்கைக்கு இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால், கைது, சித்திரவதை, உயிர் அச்சுறுத்தல் ஆபத்து இருப்பதாக சட்டவாளர்கள் வாதிட்டிருந்தனர்.
தமது கட்சிக்காரர்கள் மூவர் நாடு கடத்தப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக டங்கன் லூவிஸ் சட்டவாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.
ஜெய்ன் சட்டவாளர்கள் அமைப்பு, ஒருவரின் நாடுகடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இலங்கைக்கு அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக, ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகேயுள்ள குடிவரவுத் தடுப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 28 பேர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் மேலதிக விசாரணைகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களுள் 14 தமிழர்களும் 9 சிங்களவர்களும் 5 முஸ்லிம்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
60 பேர் பிரித்தானியாவி;ல் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் நேற்று இறுதி நேரத்தில் பலர் நாடுகடத்தலுக்கான தடையுத்தரவு கோரி அந்த நாட்டு மேல்நீதிமன்றில் அவரச மனுதாக்கல் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 32 பேர் பிரித்தானியாவிலேயே விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad