புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2012


உல்லாசத்திற்கு அழகிகள் அனுப்பி வைக்கப்படும் : நூதன விளம்பர மோசடி
திருச்சி கலெக்டர் ஆபீசு ரோடு ராஜா காலனியை சேர்ந்தவர் ராஜா (28). ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் இணையதளத்தில் 'பிரவுசிங்' செய்தபோது உல்லாசத்திற்கு அழகிகள் அனுப்பி வைக்கப்படும் என்ற நூதன விளம்பரத்தை பார்த்தார்.

அழகி வேண்டுவோர் அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.   உடனே ராஜா அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய நபர் நல்ல அழகி வேண்டும் என்றால் ரூ.6 ஆயிரம் பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தும்படி கூறினார்.

அதன்படி கடந்த மாதம் 27-ந்தேதி ராஜா அந்த வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அழகிகள் யாரும் அனுப்பி வைக்கப்படவில்லை. ஏமாற்றம் அடைந்த ராஜா மீண்டும் அந்த செல்போன் நெம்பரை தொடர்பு கொண்ட போது அந்த நபர் இப்போதே வருவார், நாளை வருவார் என்று கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.

அதன் பிறகுதான் ராஜா ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். தன்னைப்போல் மேலும் பலரும் அழகி ஆசையில் ஏமாந்ததை தெரிந்து கொண்டார். மோசடி கும்பலை பிடித்து பணத்தை மீட்டு தருமாறு ராஜா, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் புகார் செய்தார்.
 
இதைத்தொடர்ந்து விபரசார தடுப்பு ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தந்திரமாக பேசி மோசடி கும்பலை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி அந்த செல்போனில் பேசி வாலிபரை நைசாக திருச்சிக்கு வரவழைத்தனர்.

தனக்கு பொறிவைக்கப்பட்டு உள்ளது என்பதை அறியாமல் அந்த வாலிபர் வந்தார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அழகி ஆசை காட்டி மோசடி செய்த வாலிபர் பெயர் சிங்கார வேலு (வயது 36). சேலம் அருகே உள்ள இடைப்பாடி, வெள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது.   அவரிடம் இருந்து செல்போன்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

சிங்காரவேலு பிளஸ்-2 வரை படித்து உள்ளார். இணையதளத்தில் அழகிகள் தேவையா? என்று விளம்பரம் செய்தால் பலர் வருவார்கள், பணம் சுருட்டலாம் என்றும், அழகி ஆசையால் ஏமாந்தவர்கள் வெளியில் கூறினால் அவமானம் என நினைத்து புகார் கூற மாட்டார்கள் என்று தைரியமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இணையதளத்தில் அழகியுடன் உல்லாசமாக இருக்கலாம் அழையுங்கள் எனக் கூறி செல்போன் நெம்பரை கொடுப்பான். அதில் தொடர்பு கொள்பவர்களை வங்கி கணக்கில் பணம் செலுத்த கூறுவான். தன்னிடம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் நேபாளம் உள்பட பல அழகிகள் உள்ளனர்.

அழகிகள் வயது, அழகை பொறுத்து ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விலை பேசுவான். பணம் செலுத்திய பிறகு பேசுவதை நிறுத்தி விடுவான். இப்படி கடந்த ஒரு வருடத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் சிங்காரவேலு லட்சக் கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

சிங்காரவேலுவின் வங்கி கணக்கை திருச்சி போலீசார் வாங்கி அதில் யார்-யார், கடந்த ஒரு வருடத்தில் அழகி ஆசையால் பணம் செலுத்தியுள்ளனர் என விசாரணை நடத்த உள்ளனர். அழகி ஆசையில் திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, கரூர், தஞ்சை, மதுரை என பல பகுதிகளில் இருந்து சிங்கார வேலுவிடம் பணம் கொடுத்து பலர் ஏமாந்து உள்ளனர். இதில் கல்லூரி மாணவர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை உள்ளனர்.

தங்கள் அழகி ஆசை விவகாரம் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி விடுமோ என்று அவர்கள் பீதியில் உள்ளனர்.   இதற்கிடையே சிங்கார வேலுவுடன் சேர்ந்து மேலும் 2 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.
 

ad

ad