புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2012

நான் தனி ஆளாக நின்று சமாளிப்பேன் :28 பேரும் ஓடினாலும் பரவாயில்லை; விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
மதுரை கோரிப்பாளையத்தில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பக்ரீத் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் இலவசமாக ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி  வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசும்போது, அதிமுக விரித்த வலையில் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் சிக்கிக்கொண்டது பற்றி ஆவேசமாக பேசினார்.

அவர்,   ‘’என் கட்சிக்காரர்கள் ஓடியது பற்றி நான் கவலைப்படவில்லை.  28 பேரும்  ஓடினாலும் பரவாயில்லை.  நான் தனி ஆளாக நின்று சமாளிப்பேன். 

 நான் கடந்த  திமுக ஆட்சியில் ஒத்த ஆளாக நின்று சமாளித்தவன்.  இன்று 29 எம்.எல்.ஏக்களை  கையில் வைத்திருக்கிறேன்.  பண பலத்தால் என் எம்.எல்.ஏக்களை விலைக்கு  வாங்குகிறார்கள்.  எனக்கு தொண்டர்களை விலைக்கு வாங்குகிறார்கள்.  என் கட்சி  எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு என் கட்சி வளர்ந்திருக்கிறது.  

என் கட்சி எம்.எல்.ஏக்களை வாங்கும் அளவிற்கு இருகிறது.  ஆளுங்கட்சிக்கு திறமையில்லை.  திரும்பவும் சொல்கிறேன்.  நான் மக்களையும்,  கடவுளையும்தான் நம்புகிறேன். 

 போயஸ் வீட்டிற்கு முதலில் என் கட்சி எம்.எல்.ஏக்களை வரவழைத்து, பின்னர், தொகுதி சம்பந்தமாக சந்திப்பது போல் செய்துவிடலாம் என்று கோட்டைக்கு சந்திப்பை மாற்றியுள்ளனர்.  இந்த நாடகத்தை விரைவில் நானே முடித்துவைப்பேன்’’ என்று பேசினார்.

ad

ad