புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2012


2  தேமுதிக எம்.எல்.க்கள் ஜெயலலிதாவுடன் திடீர் சந்திப்பு. அதிமுகவில் சேருகிறார்களா? விஜயகாந்த் அதிர்ச்சி.

தேமுதிக எம்எல்ஏக்கள் 2 பேர் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் திடீரென சந்தித்து பேசினர். அவர்கள் இருவரும் அதிமுகவில் சேர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து போட்டியிட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே அதிமுக தேமுதிக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவை அதிமுக ஓரங்கட்டியது. இதனால், மார்க்சிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து தேமுதிக தனியாக போட்டியிட்டது.

உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து அதிமுகவையும் முதல்வர் ஜெயலலிதாவையும் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அவரது கட்சி நிர்வாகிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பதிலுக்கு அதிமுகவினரும் விஜயகாந்தை விமர்சிக்கின்றனர். இந்நிலையில், தேமுதிக எம்எல்ஏக்கள் 2 பேர் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளனர். மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ ஆர்.சுந்தர்ராஜன், திட்டக்குடி தொகுதி எம்எல்ஏ கே.தமிழழகன் ஆகியோர் இன்று காலை 9.15 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 15 நிமிடம் நடந்தது. பின்னர் வெளியே வந்த எம்எல்ஏக்கள் இருவரும் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

திடீரென முதல்வரை சந்தித்துள்ளீர்களே, இதில் முக்கியத்துவம் ஏதும் உள்ளதா? இந்த அரசு நல்ல திட்டங்கள் எது செய்தாலும் அதற்கு ஆதரவு கொடுக்க நாங்கள் என்றும் தயாராக இருப்போம் என சொல்வதற்காகவே முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தோம். எங்கள் தொகுதியில் உள்ள பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அதை தீர்த்து வைக்கும்படி முதல்வரை கேட்டுக் கொண்டோம். கண்டிப்பாக செய்து கொடுப்பேன் என்று முதல்வர் கூறியுள்ளார். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பார் என்று நினைக்கிறோம். நீங்கள் இருவரும் அதிமுகவில் சேர்ந்துள்ளீர்களா? தொகுதி பிரச்னைகள் தொடர்பாக முதல்வரை சந்திக்க வந்தோம். உங்கள் கட்சி தலைவரின் ஒப்புதலை பெற்றுதான் முதல்வரை சந்திக்க வந்துள்ளீர்களா? எங்களை வெற்றி பெற செய்த தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கும்படி சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். ஆனால், அந்த பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை.

அதனால் முதல்வரை நேரில் சந்தித்து பிரச்னைகளை தீர்த்து வைக்கும்படி கோரினோம். அதை கவனிப்பதாக முதல்வர் தெரிவித்தார். உங்கள் கட்சி தலைவர் இந்த அரசுக்கும், அரசின் கொள்கைகளுக்கும் எதிராக இருக்கும் நிலையில், அவரது அனுமதி இல்லாமல் முதல்வரை சந்திக்க வந்துள்ளீர்களே? இந்த அரசு தமிழக மக்களுக்கு நல்ல அரசாக செயல்பட்டு வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில் எங்கள் தொகுதி மக்களுக்கு முதல்வர் கண்டிப்பாக நல்லது செய்வார். இவ்வாறு அவர்கள் கூறினர். கட்சித் தலைமையின் அனுமதியின்றி எம்எல்ஏக்கள் 2 பேர் முதல்வரை சந்தித்து பேசியிருப்பது தேமுதிகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த எம்எல்ஏக்கள் இருவரும் அதிமுகவில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
as

ad

ad