புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2012

ஜெயலலிதாவுடன் சந்திப்பு-பரபரப்பு : மேலும் 2 விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 


மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் தமிழக முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை நேற்று (26/10/2012) காலை சந்தித்தனர்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும், தேமுதிக வட்டாரத்தில் சலசலப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில்,   மேலும் 2 தேமுதிக எம்.எல்.ஏ.,க்கள் இன்று முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்தனர்.

 திரைப்பட தயாரிப்பாளரும், ராதாபுரம் தொகுதி எம்.ஏல்.ஏவுமான மைக்கேல்ராயப்பன், நடிகரும், பேராவூரணி தொகுதி அருண்பாண்டியன் ஆகிய இருவரும் முதல்வரை ‌அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

ad

ad