புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2012


தமிழ்நாட்டை நீலம் புயல் தாக்குமா?
 
வங்ககடலில் அந்தமான் அருகே 3 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதுமேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வந்தது. நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) மாறியது. நேற்று தீவிர மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த கட்டமாக எந்த நேரத்திலும் இது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினம்- ஆந்திர மாநிலம் நெல்லூர் இடைபட்ட பகுதியில் 550 கிலோ மீட்டர் கிழக்கே மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
 
இது புயலாக மாறினால் நீலம் என்று பெயர் சூட்டப்படும். இந்த புயல் நாளை மாலை தமிழ்நாட்டை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 65 கிலோ மீட்டரில் இருந்து 80 கிலோ மீட்டர் வரை சூறைகாற்று வீசும். இதனால் நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
 
புயல் சின்னம் காரணமாக நேற்று கடலூர் மற்றும் புதுவை துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இன்று புயல் சின்னம் மேலும் தீவிரம் அடைந்ததால் 3-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 
புயல் சின்னத்தால் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையிலிருந்து இடைவிடாது மழை கொட்டுகிறது. கடலூர் மற்றும் புதுவை பகுதியில் நேற்று நள்ளிரவு மிக பலத்த மழை பெய்தது.
  
புயல் மழையை தொடர்ந்து கடலூர், விழுப்புரம், புதுவையில் அரசு சார்பில் வெள்ள சேத தடுப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன

ad

ad