புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012


புலிகளின் மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதா?! கனடாவில் இளையராஜாவை எதிர்த்து போராட்டம்
கனடாவில் நவம்பர் 3-ந்தேதி இளையராஜாவின் இசைக்கச்சேரி நடக்கிறது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழர் அமைப்பு செய்து வருகிறது
இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளையராஜா கனடா சென்றார்.
ரொறன்ரோ  நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இளையராஜா இன்று பகல் 11:00 மணிக்கு அங்கு சென்ற போது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை.
எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழாக் குழுவினர் இளையராஜாவை பாதுகாப்பாக அழைத்து சென்று ஹோலுக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
2ம் இணைப்பு
கனடாவில் தீபாவளி கொண்டாட்டமாய் இளையராஜாவின் நிகழ்ச்சி.
நவம்பர் மாதத்தில் தமிழர்கள் களியாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக்கூடாது என்ற எதிர்ப்பின் பின், தீபாவளிக் கொண்டாட்டமாக மாறியிருக்கின்றது இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி.
இது பற்றி மேலும் தெரியவருவது என்னவெனில்,
தீபாவளியை முன்னிட்டு, கனடாவில் வரும் நவம்பர் மூன்றாம் திகதி, ட்ரினிட்டி ஈவண்ட்ஸ் நிறுவனம் சார்பாக "எங்கேயும் எப்போதும் ராஜா" என்ற நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
கனடாவில் முதன்முறையாக இளையராஜா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை விஜய் TV வாங்கியுள்ளது. முதன்முறையாக நீயா நானா கோபிநாத் கனடாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கர்களுடன் இளையராஜா மேடையில் தோன்ற உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சினேஹா, பிரசன்னா, விவேக், கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் மற்றும் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தமிழகத்தின் முன்னணி பாடகர்கள் திரு. யேசுதாஸ், ஹரிஹரன், விஜய் யேசுதாஸ், மனோ, கார்த்திக், ஹரிசரண், சித்ரா, சாதனா சர்கம், மஞ்சரி, ரம்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இளையராஜா அவர்களின் வாரிசுகளான யுவன், கார்த்திக், பவதாரணி ஆகியோரும் தந்தையுடன் மேடையில் தோன்றுகின்றனர்.
தீபாவளிக்கு டொரோண்டோ நகரம் இளையராஜா இசையுடன் மிக பிரமாண்டமாய் தயாராகிறது.

ad

ad