புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2012


பிரித்தானிய யுவதிகள் கைது விடயத்தில் தவறிழைத்த இலங்கைப் படையினர்!
மேற்கிந்திய கிரிக்கட் வீரர் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு செல்ல முற்பட்டதாக கூறி 3 பிரித்தானிய யுவதிகள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கையின் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு தவறு இழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு பிரிவினர், மூன்று பிரித்தானிய யுவதிகளையும் தவறான சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துவிட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மாணவிகளான மூன்று பேரும் எந்த ஒரு இலங்கையின் சட்டத்தையும் மீறவில்லை என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த மூன்று யுவதிகளும் தமது விருந்தினர் என்றும் அதிகாலை 1.45 வரை அவர்கள் தம்முடன் மதுபானசாலையில் இருந்ததாகவும் பின்னர் தமது அழைப்பின்பேரிலேயே தமது அறைக்கு வந்ததாகவும் கிறிஸ் கெய்ல் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியில் ஏனைய வீரர்களும் உடன் இருந்ததாக கெய்ல் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இந்த யுவதிகள் கைது விடயம் அடிப்படையில் தேவையற்ற விடயம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ad

ad