புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012

மண்டபம் முகாமில் 65 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் 32 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்ட 65 தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
முகாமில் இருந்து கடந்த மாதம் வெளியேறி படகில் நாகப்பட்டினம் கரை நோக்கிச் சென்ற 3 பெண்கள், ஆண் குழந்தை உள்ளிட்ட 65 பேரை இந்திய கடலோரப் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 32 நாட்களாக இருட்டறையில் அடைத்து கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்துவதால் எங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று கோரி நேற்றுக்காலை முதல் சிறப்பு முகாமுக்குள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதனையடுத்து முகாம் தனித்துணை ஆட்சியர் துரை தலைமையில் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இறுதியில் அவர்களது கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக துணை ஆட்சியர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

ad

ad