புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012


நவம்பர் 6-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா நாளை தனது வாக்கை பதிவு செய்கிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே, தேர்தலுக்கு முன்னதாக அதிபர் ஒருவர் வாக்களிப்பது இதுவே முதல்முறை. அமெரிக்க தேர்தல் சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில வாக்காளர்களும் தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட தினத்தில் வாக்களிக்க முடியும். இந்நிலையில், நாளை ஒபாமா சிகாகோவில் வாக்களிக்கிறார். இதுபற்றி தகவல் தெரிவித்த ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் ஜென் கூறுகையில், ‘அதிபராக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்னதாக வாக்களிப்பதன் மூலம் ஒபாமா சரித்திரம் படைக்க உள்ளார்’ என்றார். 

கொலராடோ மாகாணத்தில், தனது தேர்தல் பிரச்சாரத்தின் இடையே இதுபற்றி பேசிய ஒபாமா, ‘நீங்கள் கொலராடோவில் முன்னதாக வாக்களிப்பதைப் போல, நாங்கள் இல்லினாய்சில் வாக்களிக்க முடியும். நான் மீண்டும் கொலராடோவுக்கு வருவேன். நான் இப்போது உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். அமெரிக்காவை முன்னோக்கி கொண்டு செல்ல எனக்கு உதவுங்கள் என்று கேட்க வந்துள்ளேன்’ என்றார். இந்நிலையில், டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை பதிவான தேர்தலுக்கு முந்தைய வாக்குகளில் ஒபாமா மூன்றில் இருபங்கு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இதனால் ஒபாமா இரண்டாவது முறையாக அதிபர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.  

இதுபற்றி ஒபாமா பேசுகையில், ‘நாம் இந்த தேர்தலில் ஜெயிக்கப் போகிறோம். நாம் துவங்கியவற்றை முடிக்கப் போகிறோம். அமெரிக்கா ஏன் உலகிலேயே முதன்மையான நாடாக இருக்கிறது என்பதை நாம் உலகிற்கு உணர்த்துவோம். ஈராக், ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என கடந்த முறை நான் கூறினேன். அதைப்போல் ஈராக், ஆப்கனில் போரை முடித்தோம். இரட்டைக்கோபுர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது மீண்டும் கவனம் செலுத்துவோம் எனக் கூறினேன். இப்போது நியூயார்க் ஸ்கைலைனுக்குமேல் புதிய கோபுரம் உயர்ந்து வருகிறது. அல்-கொய்தா தோற்கடிக்கப்பட்டது. பின்லேடன் கொல்லப்பட்டான். நமது வீரர்கள் நாடு திரும்புகின்றனர். நான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நான் நிறைவேற்றியுள்ளேன்’ என்றார்.

ad

ad