புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2012

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி லயன்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றி
சாம்பியன்ஸ் லீக் இருதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லயன்ஸ் அணி
 
 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் இருதுக்கு20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதன் 2ஆவது
நாளான நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள மும்பை இந்தியன்ஸ்-லயன்ஸ் (தென்னாபிரிக்கா) அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வெயின் சுமித்,
டெண்டுல்கர் ஆகியோர் களம் இறங்கினார்கள். டெண்டுல்கர்
மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த சுமித் அடித்து ஆடினார். 19 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 26 ஓட்டங்கள் எடுத்த சுமித், மொரிஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டெண்டுல்கர் 24 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் களம் கண்ட ரோகித் ஷர்மா 27 ஓட்டங்களுடனும், பொல்லார்ட் 11 ஓட்டங்களுடனும், மிட்செல் ஜொன்சன் 30 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்தது. லயன்ஸ் அணி தரப்பில் சொகைல் தன்விர் 2 விக்கெட்டும், டிர்க் நானஸ், மொரிஸ், பான்ஜிசோ தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 158 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன்

லயன்ஸ் அணி துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அல்விரோ பீட்டர்சன் 14 ஓட்டங்களுடனும், போடி 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். 3ஆவது விக்கெட்டுக்கு மெக்கன்சி, குயிஸ்டன் டி கோக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இறுதி வரை நிலைத்து நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தது.


18.5 ஓவர்களில் லயன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி கோக் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ஓட்டங்களுடனும், மெக்கன்சி 41 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 68 ஓட்டங்களுடனும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

ad

ad