புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012


அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி


இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டிகளின் சூப்பர் 8 சுற்றிலே இன்று
அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள்கொழும்பு  பிரேமதாச மைதானத்தில் மோதின.

நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இருபது ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது. நஷீர் ஜாம்செட் 46 பந்துகளுக்கு 55 ஓட்டங்களையும், அக்மல் 26 பந்துகளுக்கு 32 ஓட்டங்களையும் பெற்றனர். ஸ்டார்க் 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.


அடுத்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.மைக்கல் ஹஸி 47 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை எடுத்தார். அஜ்மல் 3 விக்கெட்டுளையும்,  ஹசன், ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள அதேவேளை தென்னாபிரிக்கா  அரையிறுதிக்கு தகுதி பெறத்தவறியுள்ளது. இந்தியா-தென்னாபிரிக்க அணிகள்மோதும் போட்டியில் அபார வெற்றியை பெற்றால் மட்டுமே இந்தியா  அரையிறுதிக்கு தகுதிபெறும் இல்லாவிடின் பாகிஸ்தான் அணியே   அரையிறுதிக்குள் நுழையும்.

ad

ad