புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012


கிறித்துவ மதத்தை கொச்சைப்படுத்துகிறேனா? -கவியரசு வைரமுத்து விளக்கம்!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, சீனுராமசாமி டைரக்டு செய்துள்ள படம் நீர்ப்பறவை. இப்படத்தின் பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.


அதில் ஒரு பாடலில், ''என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும்ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்'' என காதலன் பாடுவதாக எழுதியிருந்தார்.
இந்த பாடல் வரிகளுக்கு கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கவியரசு வைரமுத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து நாம் கவியரசு வைரமுத்துவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
''யாருடைய மனதையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அந்த பாடல் எழுதப்பட்டது. அந்த வரிகள் கதாபாத்திரத்தின் குரல். கிறித்துவ மதத்தை மேம்படுத்தும் விதமாய் அந்த வார்த்தைகளை பாடலில் பயன்படுத்தியிருக்கிறேனேயொழிய கொச்சைப்படுத்தும் விதத்தில் எழுதவில்லை'' என்றுவிளக்கம் அளித்தார்.

ad

ad