புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2012

பெர்த் ஸ்கோர்சர்ஸ்- கொல்கத்தா போட்டி மழையால் ரத்து: தொடரிலிருந்து வெளியேறியது கொல்கத்தா
சாம்பியன் லீக் தொடரில் முதல் அணியாக வெளியேறிது கொல்கத்தா அணி.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு டர்பனில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணியும் மோதின. 

 



கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் க
ளம் இறங்கிய கொல்கத்தா அணியில் மூன்று மாற்றமாக ஷகிப் அல்-ஹசன், சாங்வான், ரஜத் பாட்டியா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பிரெட்லீ, இக்பால் அப்துல்லா, டெதப்ரதா தாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணித் தலைவர் கம்பீர் முதலில் பெர்த் அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய பெர்த் அணி கிப்சின் (0) விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தாலும் ஷான் மார்சும், சைமன் கேடிச்சும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஷான் மார்ஷ் 38 ஓட்டங்கள் (40 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அந்த அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இந்த ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஏற்கனவே 2 ஆட்டங்களில் தோற்று இருந்ததால் ஐ.பி.எல். சாம்பியனான கொல்கத்தா அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேற்றப்பட்டது.

ad

ad