புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2012

ஆசிரிய தகுதி தேர்வுக்கான விடைகள் இன்று வெளியிடப்பட்டது. விடைகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
தமிழகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. முதல் முறை நடந்த தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்தவர்கள், புதியவர்கள் என சுமார் 6.5 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.
 
முதல் முறையாக கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வில், தேர்வு எழுத ஒன்றரை மணி நேரம் கொடுக்கப்பட்டது. கேள்வியும் கடினமாக கேட்கப்பட்டிருந்தது. இதனால் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். விடையளிக்க நேரம் போதவில்லை என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
 
இதனால் 2-வது முறை நடந்த தேர்வில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் கேள்விகள் கடினமாக இருந்ததால் பலர் விடையளிக்க முடியாமல் திணறினர். எனவே இந்த முறையும் தேர்ச்சி எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு இருக்காது என்றே தெரிகிறது.
 
இந்நிலையில், ஆசிரிய தகுதி தேர்வுக்கான விடைகள் இன்று வெளியிடப்பட்டது. விடைகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த விடைகளில் ஆட்சேபம் ஏதும் இருந்தால் வருகிற 26-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 
இதன்மூலம் தேர்வு எழுதியவர்கள் தாங்கள் அளித்த பதிலை சரிபார்த்து எத்தனை மதிப்பெண் கிடைக்கும் என முன்கூட்டியே கணித்துக்கொள்ள முடியும். மேலும் ஆட்சேபத்துக்குரிய பதிலை தேர்வு வாரியத்திடம் தெரிவிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
விடைகள் தவறாக இருப்பது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால், தேர்வுக்குழு பரிசீலனை செய்யும். அதன்பின்னர் இறுதி விடை பட்டியல் வெளியிடப்படும்.

ad

ad