புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012


தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை
விடுத்துள்ளார்.
இது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரும் என்ற வகையில் பொலிஸ் மா அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:
கடந்த 30 வருடங்களாக பல மனிதப் படுகொலைகளுக்கு காரணமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பல்லாயிரம் டொலர்களை சேகரித்தமை, ஆயுதங்களை இவ்வியக்கத்துக்கு விநியோகித்தமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்ற குமரன் பத்மநாதன் (கே.பி) என்பவரை சர்வதேச பொலிஸார் கைது செய்ய தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

இது குறித்து சர்வதேச பொலிஸார் இணையத்தளங்களில் தகவல் வெளியிட்டிருப்பதோடு இந்தியா, சென்னையிலுள்ள நீதிமன்றிலும் குமரன் பத்மநாதனை கைது செய்ய பிடிவிறாந்து ஒன்றையும் பெற்றுள்ளனர்.
இந்த பிடிவிறாந்தின் பிரதி ஒன்றை கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி என்னால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அவை இலங்கையில் பிரசித்தியும் பெற்றன.
நான் இதனை சமர்ப்பிக்கும்போது பாராளுமன்றில் உயரதிகாரிகளின் பகுதியில் ஜனாதிபதியின் செயலாளர், சட்டமா அதிபர் திணைக்கள மற்றும் பொலிஸ் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளும் இருந்தனர்.
இலங்கை பொலிஸ் சர்வதேச பொலிஸில் அங்கத்துவம் பெற்றிருக்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் தலைமறைவாயுள்ள இலங்கையில் தேடப்படும் குற்றவாளிகளை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மிகுந்த தொடர்புகளை பேணி வரும் சர்வதேச பொலிஸாரிடம் குமரன் பத்மநாதன் தொடர்பான விபரங்களை இலங்கை பொலிஸார் வழங்குவது பொறுப்பாகும்.
குமரன் பத்மநாதன் தொடர்பான தகவல்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஜெனரல் லக்ஷ்மன் ஹுலுகல்ல மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகிய இருவரும் நடத்திய ஊடக மாநாட்டின்போது கே.பி. தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி குமரன் பத்மநாதன் தொடர்பான தகவல்கள் அனைத்தும் மிகக்கூடிய விரைவில் சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
சர்வதேச பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையதளமான www.interpol.int என்பதில் அவர்களது மின்னஞ்சல் உள்ளிட்ட அனைத்தும் உள்ளன.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ad

ad