புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2012


ஈரானுக்கு இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்களை அமெரிக்கா தடுத்தது
ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்கா பச்சை விளக்கை காட்டும் வரை இலங்கையால் ஈரானிடம் இருந்து எவ்வித மசகு எண்ணெய் கொள்வனவையும் மேற்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தமது ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை.
எனினும் அமெரிக்க தடை காரணமாக, இலங்கையில் சிறிய கப்பல்களை அனுப்புமாறு ஈரான் கோரியது. அதற்கமைய கப்பல்களும் அனுப்பப்பட்டன.
எனினும் ஈரான் செல்லும் கப்பல்களுக்கு காப்புறுதியை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் முன்வர மறுக்கின்றன.
இதன் காரணமாக ஈரானுடன் வங்கி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

ad

ad