புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012


நோர்வேயில் பழிவாங்கப்படும் வெளிநாட்டுப் பெற்றோர்
ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் இலங்கைத் தாய்மார் இருவரால் நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரப் போராட்டத்தின் ஊடாக நோர்வே சிறுவர் காப்பகத்தின் ஏதேச்சாதிகாரப்போக்கு சர்வதேசத்தின் முன்னிலையில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
 

நோர்வே நாட்டு அரசாங்கத்தின் நேரடி பார்வையில் கீழ் இயங்கிவருகின்றதான சிறுவர் காப்பகங்களில் இடம்பெறுகின்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை நோர்வே அரசு கண்டு கொள்ளாதிருந்தமை@ய இதற்கு பிரதான காரணமாகும்.

நோர்வே சிறுவர் காப்பகம் தொடர்பில் இலங்கை, இந்தியா, ரஷ்யா, @சாமாலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் அதிருப்தி கொண்டிருக்கின்ற நிலையில் நோர்வே சிறுவர் காப்பக அதிகாரிகள் மற்றும் உயர்மட்டத்தினர் தற்போது பிள்ளைகளை வைத்து பெற்றோரை பழிவாங்கும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
சிறுவர் காப்பக விவகாரம் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்தமை, இலங்கையில் நோர்வே தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை, ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 10 தினங்கள் இலங்கைத் தாய்மாரினால் மேற்öகாள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அதனையடுத்து நோர்வே அரசுக்குள் எழுந்துள்ள சலசலப்பு நிலைமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தற்போது ஒரு சில பெற்றோர் பிள்ளைகளை சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.


தமது பிள்ளைகளை சந்திப்பதற்கோ அல்லது தொலை@பசியில் உரையாடுவதற்@கõ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வே சிறுவர் காப்பக அதிகாரிகளால் தாம் பழிவாங்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் சர்வதேசத்தின் முன்னிலையில் வெளிச்சமிட்டு காட்டப்பட்டுள்ளதையடுத்து நோர்வே சிறுவர் விவகார அமைச்சு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமது காப்பகங்களில் தவறுகள் இழைக்கப்பட்டிருப்பதாகவும் காப்பக அதிகாரிகள் போதிய அனுபவமில்லாதவர்களாக இருப்பதாகவும் கூறியிருந்தது.

எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்படி சிறுவர் நலவிவகார அமைச்சர், சட்டத்துக்கு உட்பட்ட வகையிலேயே காப்பகம் செயற்பட்டுவருவதாக மாற்றுக்கருத்தினை அப்டன் போஸ்ட் என்ற ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இது பரஸ்பரவி@ராத மற்றும் முரண்பட்ட கருத்துக்களாகும்.

மேலும் சிறுவர் காப்பக விவகாரத்தில் வெளிநாட்டவர் மீது நோர்வேயில் இனவாதம் மிதமிஞ்சி காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.

ad

ad