புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2012

மாதகல் மேற்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து கூட்டமைப்பு விசனம்
மாதகல் மேற்கில் மழைக்கு மத்தியில் மீளக்குடியேறிய மக்களுக்கு அரசால் எதுவித உதவியும் செய்து கொடுக்கப்படாதுள்ள நிலையில், காணிகளைத் துப்புரவாக்கி தற்காலிக வீடுகளை அமைக்க முற்படும் அம் மக்களை கடற்படையினர் அச்சுறுத்திவருவதாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட, வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாதகல் மேற்கு கிராமத்திற்கு நேற்று நேரில் சென்று சுரேஷ் பிரேமச்சந்திரன் பார்வையிட்டு, மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அவர் தனது விஜயம் குறித்து எமது ஒன்லைன் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
20 வருடங்களுக்கு மேலாக தங்கள் சொந்த நிலங்களை இழந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் தமது காணியில் அமர அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் அதனைத் துப்புரவாக்கி வருகின்றனர். ஆயினும் அம் மக்களுக்கு, துப்புரவாக்குவதற்கு உரிய ஒரு வசதியையும் அரச அதிகாரிகள் இன்னமும் வழங்காத நிலையே காணப்படுகிறது.

துப்புரவாக்குவதற்குரிய பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இந் நிலையில் மழையையும் பொருட்படுத்தாது, துப்புரவாக்கி வருகின்றனர். அத்துடன் தற்காலிக கொட்டில்களை அமைக்க முற்படுகையில் அங்கு வந்த கடற்படை அதிகாரிகளால் இந்தப் பகுதியில் தாங்கள் சொல்லும் வரை வீடுகள் போடவோ மரங்கள் வெட்டவோ வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்படையினரின் முகாம்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் கழிவுப் பொருட்கள் என்பன அருகிலுள்ள மக்களின் கிணற்றுக்குள் வந்தடைகின்றன. கிணறு கழிவுப் பொருட்களால் நிறைந்து காணப்படுகின்றது. கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகின்றது.

அத்துடன், மாதகல் மேற்குப் பகுதியில் இன்னமும் பாடசாலை, தபாலகம், கூட்டுறவுச் சங்கம் மற்றும் அன்னதான மடம் ஆகியன தற்போதும் கடற்படையினரின் வசமே இருந்து வருகிறது.

இதனால் மீள்குடியேறியுள்ள மாணவர்கள் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாடசாலைக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய தேவை எற்பட்டுள்ளது.

இது தொடர்பில், எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் நாம் அமைச்சரிடமும், ஆளுநரிடமும் கதைப்போம். என்றார்.

ad

ad