புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2012


உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மோதி கொழும்பு சொகுசு பேரூந்தும் விபத்து! இருவர் பலி -இயக்கச்சியில் அதிகாலை சம்பவம்
 டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நேற்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேரூந்தும் இடிபட்டு டிப்பர் வாகனச் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச் சம்பவம் இயக்கச்சியில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.

டிப்பர் வாகனச் சாரதியின் சடலம் இன்னும் அதே இடத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது.
இச்சம்பவத்தின் போது சொகுசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய செய்தி
இவ் வீதி விபத்தில் உழவு இயந்திர சாரதியும் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உழவு இயந்திரத்தில் வீதி புனரமைக்க கல்நெரிக்கும் இயந்திரத்தை ஏற்றிச்சென்றவேளையிலேயே டிப்பர் வாகனம் மோதியதில் அக்கல்நெரிக்கும் இயந்திரம் உழவு இயந்திரச் சாரதியின் மீது புரண்டதில் அச்சாரதி உயிரிழந்ததாகவும் அச்சாரதியின் முகம் உருக்குலைந்த நிலையில் வயல்வெளிக்குள் காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு சாரதிகளும் உயிரிழந்ததனால் விசாரணை செய்வதில் சிரமம் என பொலிஸ் வட்டாரங்களும் தெரிவித்தன.
3ம் இணைப்பு
ஏ9 வீதியில் ஆனையிறவை அண்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் கிளிநொச்சி-கோணாவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அதிகாலை 4மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் கோணாவிலைச் சேர்ந்த இ.லோகேஸ்வரன் என்ற 3பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மேலும் காயமடைந்த 3பேர் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த டிப்பர் கனரக வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது மோதி பின்னர் கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்துடனும் மோதி விபத்திற்குள்ளாகியிருக்கின்றது.
இதில் உழவு இயந்திரத்தின் சாரதி தூக்கி வீசப்பட்டு டிப்பர் சில்லுக்குள் வீழ்ந்துள்ளார்.
பேருந்தில் பயணித்தவர்கள் 3பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.

ad

ad