புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2012

இந்தியாவின் விடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு கோரி, இந்திய தீர்ப்பாயத்தில், அவ்வமைப்பின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளர் சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளார்
இந்த சத்தியக்கடதாசி, சென்னையில் உள்ள சட்டத்தரணி, ராதாகிருஸ்ணன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில், விடுதலைப்புலிகளின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளரான பி.சிவநேசன், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து வாதங்களை முன் வைத்துள்ளார்.

மனுவில், தாம் விடுதலைப்புலிகளின் சுவிட்ஸாலாந்து இணைப்பாளர் என்று கூறியிருக்கும் சிவநேசன், தாம் இலங்கையில் இருந்து நெதர்லாந்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் சார்பாக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமிழர்களின் பாதுகாப்பைக்கோரி, தாம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் பொது அக்கறை வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பதற்காகவே விடுதலைப்புலிகள் போராடினர்.
இந்தநிலையில் இந்தியாவில் தற்போது விடுதலைப்புலிகளின் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.
2010 - 2011 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவில் இருந்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
எனவே இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்று சிவநேசன் தமது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவின் சமர்ப்பிப்பின்போது கேள்வி எழுப்பிய தீர்ப்பாயத்தின் நீதிபதி வி.கே.ஜெய்ன், சிவநேசன் விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் என்பதையும் ராதாகிருஸ்ணன் அவரின் சட்டத்தரணி என்பதையும் எவ்வாறு தெரிந்துக் கொள்ளமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய ராதாகிருஸ்ணன், சிவநேசனின் கடவுச்சீட்டு மற்றும் ஏனைய தகவல்கள் அவரின் சத்தியக்கடதாசியுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றுக் குறிப்பிட்டார்.
சிவநேசன் எவ்வாறு தீர்ப்பாயத்தின் முன்னால் முன்னிலையாவார் என்று நீதிபதி கேட்டதற்கு, அவர் இந்தியாவில் கைது செய்யப்படமாட்டார் என்று உறுதி வழங்கப்படுமானால், தீர்ப்பாய நடவடிக்கையில் முன்னிலையாக தமது கட்சிக்காரர் தயார் என்று ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்துக்கூறுமாறு நீதிபதி ஜெயன் மத்திய அரசாங்க சட்டத்தரணி சாந்தியிடம் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து மக்கள் தீர்ப்பாயத்தின் அமர்வு எதிர்வரும் 29 ஆம் திகதி மதுரையிலும் நவம்பர் 3 ஆம் திகதி சென்னையிலும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

ad

ad