புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012


துப்பாக்கி சுடும் போட்டியில் சிறிலங்காவுக்காக பங்கு பற்றும் புலிகள்

தேசிய துப்பாக்கிச் சுடும் அணியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னார் போராளிகள் மூவர் தெரிவாகியுள்ளனர்.  இவர்கள், அடுத்த ஆண்டு புதுடில்லியில் நடைபெறவுள்ள தெற்காசிய பிராந்திய நாடுகளின் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி
விளையாடவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
கனகசுதந்தரம் ரஜீவன், தயாபரன் தேவேந்திரன், செல்லமுத்து சுரேஸ்குமார் ஆகிய மூவருமே இவ்வணிக்கு தெரிவாகியவர்களாவர்.
இம்மூவருக்கான பயிற்சிகள் வெலிசர கடற்படை முகாமில் வைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், இவர்களுக்கான துப்பாக்கிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, நேற்று திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து கையளித்தார் எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் போராளிகள் 135பேருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையிலேயே அவர்களில் மூவர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று பிரிகேடியர் ஹெட்டியாரச்சி மேலும் குறிப்பிட்டார்.

ad

ad