புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012

இந்திய பணக்கார பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவருகின்றார்.
ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 21 பில்லியன் டொலர் என்று போபர்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்த போதிலும் 5-வது ஆண்டாக இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது சகோதரர் அனில் அம்பானி முதல் 10 இடத்துக்குள் கூட வர முடியாமல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
உலகளாவிய ஸ்டீல் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் லட்சுமி மிட்டல் 16 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். 12 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவன தலைவர் அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பலோன்ஜி மிஸ்ட்ரி (9.8 பில்லியன் டாலர்) திலீப் சங்வி (9.2 பில்லியன் டாலர்) அதி கோத்ரஜ் (9 பில்லியன் டாலர்) சாவித்தரி ஜின்டல் (8.2 பில்லியன் டாலர்) சசி அன்ட் ரவி ரூயா (8.1 பில்லியன் டாலர்) இந்துஜா சகோதரர்கள் (8பில்லியன் டாலர்) குமார் மங்களம் பிர்லா (7.8 பில்லியன் டாலர்) ஆகியோர் இந்திய பணக்காரர்களில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ad

ad