புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2012


விடுதலைப் புலிகள் சார்பில் வாதிடுவதற்கு சுவிஸ் தமிழருக்கு தீர்ப்பாயம் அனுமதி


நேற்று முன்தினமும், நேற்றும் கொடைக்கானலில் தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது தொடர்பான வழக்கில் வாதாடுவதற்கு, சுவிற்சர்லாந்தில் உள்ள அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவருக்கு நீதிபதி
வி.கே.ஜெயின் அனுமதி அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானதா என்பதை நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம், ஆராய்ந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற இதுதொடர்பான விசாரணையின் போது, சுவிற்சர்லாந்தில் தற்போது வசித்து வரும் விஜயரட்ணம் சிவநேசன் என்பவருக்கு, விடுதலைப் புலிகள் சார்பில் மனுவைச் சமர்ப்பிக்க தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. விஜயரட்ணம் சிவநேசன் தான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் என்று மனு சமர்ப்பித்துள்ளார்.
ஐரோப்பாவில் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தான் பாடுபடுவதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கைத் தமிழர் உரிமைக்காக பாடுபட்டது, தற்போது இந்தியாவில் அதன் செயல்பாடு எதுவுமில்லை. அந்நிலையில் இந்தியாவில் அதன் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்றும் கோரும் அவரது மனுவை சட்டவாளர் ராதாகிருஸ்ணன் சமர்ப்பித்தார்.
அவரது சார்பாக தீர்ப்பாயத்தின் முன் தன்னை வாதாடுமாறு கோரி சிவநேசன் அனுப்பிய கடிதத்தையும் சட்டவாளர் ராதாகிருஸ்ணன் நீதிபதியிடம் கையளித்தார். சிவநேசன் குறித்து விபரங்கள் உறுதியாகத் தெரியாத நிலையில், அவரது மனுவை ஏற்கக் கூடாது என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால் நீதிபதி வி.கே.ஜெயின் சிவநேசன் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று உத்தரவிட்டார்

ad

ad