புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012


இலங்கை மற்றும் மே. தீவுகள் கிரிக்கெட் இறுதிப்போட்டியை முன்னாள் புலிப் போராளிகளும் கண்டுகளிக்க வாய்ப்பு
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட உலக கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டி காரணமாக கொழும்பு நகரம் தயாராகியுள்ளது..
போட்டி ஆரம்பி;க்க இன்னும் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில், கொழும்பிலும், ஆர்.பிரேமதாச மைதான பகுதியிலும், அதனை அண்டிய பகுதிகளிலும், விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் நாட்டின் பல பகுதிகளில் விளையாட்டு ரசிகர்கள் ஊர்திகளில் வலம் வண்ணம் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்னர்..
இதனிடையே, இறுதிபோட்டியை கண்டுகளிக்கும் வாய்ப்பை சிறைக்கைதிகளுக்கும், புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊடகங்களுக்கு தகவலளித்த அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அனைத்து சிறைச்சாலைகளிலும், புனர்வாழ்வளிப்பு நிலையங்களிலும் அகன்ற திரைகளில் இன்றைய இறுதிப் போட்டி காட்சிப் படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்குகொள்ளும் இறுதிப் போட்டித் தொடர்பில் முழுநாடும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த தருணத்தில் சிறைக்கைதிகள், மற்றும் புனர்வாழ்வு பெறுபவர்களுக்கும் அந்த சந்தர்ப்பத்தை வழங்க நாங்கள் எண்ணினோம்.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.
இன்று இடம்பெறவுள்ள இறுதிப் போட்டி தொடர்பில் நாடளாவிய ரீதியாக ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
எம்பிலிப்பிட்டிய, இரத்தினபுரி, தம்புள்ளை பிரதேசங்களில் பாரியளவில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தம்புள்ளை பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் விசித்திரமான முறையில் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தாம் ஆதரிக்கும் அணிகள் வென்றால் தமது நகரத்தில் ஒரு கிலோமீற்றர் வரை ஊர்ந்து சென்று ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் இருவரும் இவ்வாறான விவாதத்தை முன்வைத்தனர்.
இவ்வாறான மூடநம்பிக்கையான ஆட்டநிர்ணய சதிகளால் இன்று இடம்பெறும் இறுதிப்போட்டி தொடர்பாக தீர்மானிக்க முடியாது என்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் கள பொறுப்பாளர் அநுருத்த பொலன்னோவிட்ட தெரிவித்தார்.
இருந்தபோதும், போட்டிக்கு ஏதுவான களநிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ad

ad