புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012

 ஸ்ரீபெரும்புதூர் திமுக கூட்டத்தை கருணாநிதி ரத்து செய்தது ஏன்?
ராஜீவ் கொலை! கருணாநிதி விசாரிக்கப்படாதது ஏன்? தலைமை விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு!
ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள இவ்வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியாக இருந்த ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர் திமுக கூட்டத்தை கருணாநிதி ரத்து செய்தது என் என்பது குறித்து அவரிடம் விசாரிக்கப்படவில்லை என்றும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இது தொடர்பாக ரகோத்தமன் எழுதியுள்ள 'Conspiracy to kill Rajiv Gandhi – From CBI Files’ என்ற புத்தகத்தில், ராஜீவ் கொலை சம்பவத்தின்போது அங்கிருந்த உளவுத்துறையின் வீடியோ கிராபர் அதனை படம்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த வீடியோ காணாமல் போய்விட்டதாகவும், அப்போது ஐபி( இன்டலிஜென்ஸ் பீரோ) தலைவராக இருந்த எம்.கே. நாராயணனை, ராஜீவ் கொலை வழக்கின் சிறப்பு புலனாய்வு குழு தலைவர் டி.ஆர். கார்த்திகேயன் தப்பவிட்டு விட்டதாகவும் ரகோத்தமன் தனது புத்தகத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், 1991, மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு ராஜீவ் வந்தபோது, மனித வெடிகுண்டாக வந்த தாணு பாதுகாப்பு வளையத்திற்குள் திடீரென நுழைந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ராஜீவ் வருவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே தாணு உள்ளிட்ட அவரது குழுவினர் அந்த இடத்தில் காத்திருந்ததாகவும் ரகோத்தமன் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உளவுத்துறை படம்பிடித்த உண்மையான வீடியோ காட்சிகளை தராமல், அதன் ஒருபகுதியை மட்டுமே நகல் எடுத்து உள்ளூர் போலீஸாருக்கு வழங்கப்பட்டதாகவும் ரகோத்தமன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியிடம் விசாரணை
மேலும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அதே மே 21 ம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூரில் திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டத்தில் பேச இருந்ததாகவும்,ஆனால் அது திடீரென ரத்து செய்யப்பட்டதாகவும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ரகோத்தமன், இது தொடர்பாக கருணாநிதியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும், ஆனால் அது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும், அவரிடம் விசாரிப்பதால் பயனில்லை என்றும் கூறி, ராஜீவ் கொலை வழக்கின் சிறப்பு புலனாய்வு குழு தலைவர் டி.ஆர். கார்த்திகேயன் அதனை தடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கார்த்திகேயன் மறுப்பு
இந்நிலையில் ரகோத்தமனின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள கார்த்திகேயன், இது மலிவான விளம்பரம் என்றும், ராஜீவ் கொலை தொடர்பாக சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

ad

ad