புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012

டி.ஆர். பாலுவுடன் மோதல்: கருணாநிதியுடன் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் சந்திப்பு
தி.மு.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பழனிமாணிக்கத்துக்கும், பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவருமான டி.ஆர். பாலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். நடைபெற இருக்கும்
பாராளுமன்ற தேர்தலில் அவர் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் புதிய ரெயில் பாதைகளுக்கான பணிகள், புதிய ரெயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில் டி.ஆர். பாலு இறங்கினார்.

ரெயில் நிலைக்குழு தலைவராக இருப்பதால் இந்த பணியை அவர் மேற் கொண்டதாக கூறப்படுகிறது. தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளரும், மத்திய இணை மந்திரியுமான பழனிமாணிக்கத்தின் வீட்டு அருகே ரெயில் பாலம் அமைக்க ரூ.2 1/2 கோடி நிதி ஒதுக்கி டி.ஆர்.பாலு அறிவித்தார். இதற்கு அப்பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து விளம்பரம் செய்தனர். 

டி.ஆர்.பாலுவின் இந்த செயல்களால் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் அதிருப்தி அடைந்து உள்ளார். டி.ஆர்.பாலு விளம்பரத்துக்காக தன்னிச்சையாக ரெயில்வே திட்டங்களை அறிவிக்கிறார் என்று பழனிமாணிக்கம் குற்றம் சாட்டினார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தஞ்சையில் போட்டியிட விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தஞ்சையில் அதிகமாக உழைக்கிறார் என்றும் அவர் புகார் கூறி இருந்தார். 

இந்த நிலையில் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் பழனிமாணிக்கம் நேற்று சந்தித்தார். அப்போது டி.ஆர்.பாலு தொடர்பாக பேசியதற்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார். நான் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறேன். இதுவரை டி.ஆர்.பாலு அறிவித்த திட்டங்கள் குறித்து என்னிடம் கலந்து ஆலோசிக்க வில்லை கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயலை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். என்று பழனிமாணிக்கம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

ad

ad