புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012


நீதியின் சுயாதீனத்தன்மையை பேண புதிய அரசியல் அமைப்பு உருவாக்க வேண்டும்: மனிதஉரிமை ஆணைக்குழுவின் தலைவர்
நீதி மற்றும் அரச சேவையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமாயின் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலச் சூழ்நிலைக்கு பொருந்தக் கூடிய வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டுமாயின் நீதியையும் அரச சேவையையும் அரசியலிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்.
நீதிசேவை மற்றும் அரச சேவைகளை சுயாதீனப்படுத்த வேண்டும். எனினும், நீதி மற்றும் அரச சேவைகளில் கடமையாற்றுவோரும் மனிதர்கள்.
எவ்வளவு தூரத்திற்கு இவற்றை சுயாதீனப்படுத்த முடியும். இன்று ஆளும் கட்சியில் இருப்போர் நாளை எதிர்க்கட்சிக்கு செல்கின்றனர்.
எனவே இலங்கைக்குப் பொருந்தக் கூடிய, இலங்கையின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய, வடக்கு தெற்கு என்னும் சகல பகுதிகளையும் உள்ளடக்கக் கூடிய வகையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

ad

ad