புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2012


பிரித்தானிய தமிழர் ஜீவனுக்கு கொழும்பில் நடந்தது என்ன ? உண்மைச் சம்பவம் !
ஐக்கிய ராட்சியத்தில் ஸ்காட்லனில் வசித்துவரும் ஜீவன் என்னும் இளைஞன் கொழும்பு சென்றவேளை நடந்த உண்மைச் சம்பவத்தை நாம் இங்கே தருகிறோம். 33 வயதாகும் ஜீவன் கடந்த 9ம் திகதி கொழும்புசென்றுள்ளார். 2006 ம் ஆண்டு பிரித்தானியா வந்த இவர் 2012 ல், பிரித்தானிய பிரஜாவுரிமையப் பெற்றுள்ளார். தனது சொந்த நாட்டிற்குச் சென்று, இடங்களைப் பார்த்து தனது விடுமுறையக் கழிக்கச் சென்ற ஜீவனுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. விமானநிலையத்தில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டு, அருகில் உள்ள இரகசிய வீடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முதுகில் இருந்த காயத்தைப் பார்த்த இரகசியப் பொலிசார், புலிகளோடு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டு அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளார்கள். 2006ம் ஆண்டு தாம் இலங்கையில் இருந்தவேளை புலிகளோடு எனக்கு தொடர்பு இருந்தது, இருப்பினும் அது சாதாரண தொடர்புதான் என ஜீவன் விளக்கியுள்ளார்.
16 October, 2012 by admin

இதனைச் செவிமடுக்காத இரகசியப் பொலிசார், வெளிநாட்டில் புலிகளுக்காக பணம் சேர்த்தாயா என்று அவரை மிரட்டி அடித்துள்ளார்கள். மின்சாரத்தைப் உடலில் பாச்சி கொடுமைப்படுத்தியுள்ளார்கள். ஜீவன் ஒரு பிரித்தானியப் பிரஜை என்றுகூடப் பாராமல் அவரது பாஸ்போட்டைப் பறித்துள்ளார்கள். உன்னைக் கொன்றுவிடுவோம் என்றும், புலம்பெயர் தமிழர்களால் தான் தமது நாட்டிற்கு பெரும் தொந்தரவாக இருப்பதாகவும், சிங்களப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாம் புலம்பெயர் நாட்டில் உள்ள அனைவரையும் உண்ணிப்பாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர். அவரிடம் இருந்த 325 பவுன் பணத்தை கொள்ளையடித்த ரட்நாயக்க என்னும் பொலிஸ் அதிகாரி, 15 லட்சம் தந்தால், நீ உயிர் பிழைக்கலாம் என்று கூறியுள்ளார்.

தனது நண்பர்களின் உதவியைப் பெற, ரட்நாயக்க உதவினார் என்று தெரிவித்த ஜீவன், பிரித்தானியாவில் இருந்து சுமார் 8 லட்சம் ரூபாவும், இலங்கையில் 7 லட்சம் ரூபாவும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஜீவன் விடுவிக்கப்பட்டு, தற்போது பிரித்தானியாவுக்கு வந்துள்ளார். பிரித்தானியா வந்தடைந்த ஜீவனை மருத்துவர்கள் அணுகி அவரை பராமரித்து வருகின்றனர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

ad

ad