புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012

யாழ்.பல்கலைக்கழகம் என்பது அனைவருக்கும் பொதுவானது. தமிழ் தேசியத்தை மறுப்பவர்களுக்கும் கூட. ஆனால் 99.99% யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் தமிழ்த்தேசிய நேசிப்பாளர்களே.tharsaananth paramalingam ஆனால் நிர்வாகம் அரசியல் பின்னணிகொண்டது. அது தமிழ் தேசிய செயற்பாடுகளுக்கு எவ்வளவு தான் முட்டுக்கட்டை போட்டாலும், அதால் ஒரு சிங்கிள் HAIR ஐயும் பிடுங்க முடியாது
என்பது நிதர்சனம். ஆனால் நமது தமிழ் தேசிய நேசிப்பாளர்களிடையேயே சிலர் யாழ்.பல்கலைகழக ஒன்றியங்களின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட முகப்புத்தக கணக்குகளை ஆரம்பித்து, சொல்லி வைத்தாற்போல் ஒரு குறிப்பிட்ட, அரசியல் கட்சியாகப்பதிவு செய்யப்படாத அணியொன்றுக்காக மட்டும் பிரசாரம் செய்வது, பின்னூட்டங்களை இடுவது எனும் செயலில் ஈடுபடுகின்றனர். தாங்கள் என்றோ ஒரு ஒன்றியத்தில் பதவியில் இருந்துவிட்டு, முன்னாள் ஒன்றிய உறுப்பினர் என எவ்வித குறிப்பினையும் இடாமல் இன்றும் பதவியிலுள்ளவர்கள் போலே செயற்படுவது , ஒன்றியங்களின் நடுநிலைமைத்தன்மைக்கு பாதகமான விடயம். அனைவருக்கும் பொதுவான யாழ்.பல்கலைக்கழகத்தினதும், மாணவர் ஒன்றியங்களினதும்பெயரை பயன்படுத்துவது சரி இல்லை. அதை விட உங்களுக்கு விருப்பமிருந்தால் சொந்த முகவரியில், முன்பு இந்த ஒன்றியத்தில் , இன்ன பொறுப்பில் இருந்தேன், இப்போது என்ன செய்கிறேன். இப்போது இந்த கட்சியின் ஆதரவாளன் என தெரியப்படுத்தி விட்டு கட்சி வளருங்கள். தற்போது பதவியிலுள்ள ஒன்றியங்களின் பெயரை போலியாக துஷ்பிரயோகம் செய்வது நன்றாக இல்லை. இது பற்றிய கருத்துக்களை வரவேற்கின்றேன்.

(நான் ஒருநாளும் நான் தற்போது வகிக்கும் எனது பல்கலைக்கழக ஒன்றியப்பதவியை இதுவரை கட்சி வளர்க்க பயன்படுத்தியதில்லை என்பதாலும், ஒன்றியப்பெயரில் போலி கணக்கு நடத்தவில்லை என்பதாலும் இதை பதிய உரிமை உள்ளதாக கருதுகிறேன். சொந்த முகவரி உள்ள, நடுநிலையாளர்கள் மட்டும் கருத்து சொல்லவும்.)

ad

ad