புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012

சமூகத்தின் உரிமையை விற்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றம்: அப்துல் மஜீத்
திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்ததன் மூலம் சமுதாயத்தை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடாத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் உண்மையான முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்
.
 
0

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

திவிநெகும சட்டமூலத்தை அமுல்படுத்தவதாயின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகளின் அனுமதியை நீதிமன்றம் கோரியமை மூலம் இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது மிக தெளிவாகவே தெரிகிறது. எதிர்காலத்தில் இதனால் ஏற்படப் போகும் இழப்புக்களுக்காக மக்கள் நீதி மன்றத்தை நாடும்போது தீர்ப்பளிப்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே மாகாண சபைகளின் அனுமதியை நீதிமன்றம் நாடியுள்ளது.

ஆனால் மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் இத் திட்டத்திற்கு கிழக்கு மாகாண சிறுப்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைக்குரல் என கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பது கவலை தருவதாக இருப்பினும். இது எம்மால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். காரணம் முஸ்லிம் காங்கிரஸ் மேல்மட்ட உறுப்பினர்களின் பதவிகள் மற்றும் வசதிகளை மட்டுமே பிரதானமான கொள்கையாகக் கொண்ட கட்சியாகும்.பதவிக்காக ஒட்டு மொத்த சமூகத்தையே விலை பேசி விற்றவர்களிடம் இத்தகைய செயல்களைத்தான் நாம் காண முடியும்.

இச்சட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் மட்டுமல்ல ஏன் பள்ளிவாயில்களும் கூட அரசால் சுவீகரிக்கப்படலாம். அப்போது அதற்கெதிராக நீதிமன்றம் சென்றால் அந்த வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும் நிலையே ஏற்படும். இத்தகைய பாரிய சதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் துணை போனதன் மூலம் தலைவர் எவ்வழியோ அவ்வழியை பின்பற்றி உறுப்பினர்களும் தம்பாட்டுக்கு சமூகத்தை ஏலம் போட்டு விட்டார்கள்.

கடந்த 12 வருடங்களாக முஸ்லிம் சமூகம் முஸ்லிம் காங்கிரஸால் பாதிப்புக்களையோ அடைந்து வருகிறது. முஸ்லிம் காங்கிரஸின் எத்தகைய தீர்மானங்களும் சமூகத்திற்கு நன்மை தராமல் ஒரு சில தனி நபர்களுக்கே நன்மையளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. சமூகத்தின் எந்தவொரு உரிமையையும் பெற்றுத்தர முடியாத இக்கட்சி இப்போது உரிமைகளை விற்கும் கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது.

இதனை உணர்ந்தே நாம் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென கூறினோம். ஆனால் மக்கள் சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு ஏமாற்றுக்காரர்களின் பகட்டுகளுக்குப் பின்னால் போனதன் காரணமாக ஏற்பட்டுள்ள இவ்வாறான நிலைக்கு வாக்களித்த மக்களே பொறுப்புக் கூற வேண்டும்.

இனியும் இவர்களின் பின் சென்று ஏமாற வேண்டாம். உண்மை, நேர்மை என்பவற்றின் பின் நிற்கும் அரசியல்வாதிகளின் பின் செல்லுங்கள். அப்போது தான் இத்தகைய ஏமாற்று அரசியல்வாதிகளின் விரட்டியடிக்க முடியும் என்றார்.

ad

ad