புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012


முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படக் கூடிய சாத்தியம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. திவிநெகும சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டத்திற்கு ஆளும் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
கட்சியின் தலைமை பீடத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ளாது இவ்வாறு வாக்களித்தமை கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திவிநெகும சட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் கால அவகாசம் தேவைப்படுவதாக கட்சியின் உயர் பீடம் அறிவித்திருந்த நிலையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எதேச்சையாக தீர்மானித்து சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா விஜயம் செய்துள்ள தருணத்தில், தன்னிச்சையாக தீர்மானம் எடுத்து இவ்வாறு சட்டத்திற்கு ஆதரவளித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் நாடு திரும்பியதன் பின்னர் இது தொடர்பில் பேசப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சட்டத்திற்கு தாம் ஆதரவளித்திருக்காவிட்டாலும் அரசாங்கம் சட்டத்தை நிறைவேற்றியிருக்கும் எனவும், பிரதேச மக்களின் நலனைக கருத்திக் கொண்டு சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் ஏழு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சித் தலைவர் சில எதேச்சையான தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் உயர் பீட உறுப்பினர்கள் பேச உள்ளதாகவும் ஏற்கனவே கட்சித் தகவல்கள் வெளியாகியிருந்தமை 

ad

ad