புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012

கர்நாடகத்தை சேர்ந்த மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் உச்சகட்டத்தை
எட்டியுள்ள நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் அங்கிருந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை உடனே தடுத்து நிறுத்த உத்தர விடுங்கள். காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்தி வைப்பதற்கான சாத்தியங்களை ஆராய நீங்கள் முன் வர வேண்டும். தற்போது காவிரி பாசன பகுதியில் இடைக்கால நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிபுணர் குழு அறிக்கையை பெற்று அதன் பின்னர் தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறந்து விடுவதை பற்றி ஆலோசிக்க வேண்டும்.

வரும் மாதங்களில் தங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற பய உணர்வில் உள்ள கர்நாடக மக்களின் மனநிலையால் தற்போது அங்கு நடந்து வரும் போராட்டங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதற்குள் நீங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இல்லையென்றால், காவிரி படுகையில் உள்ள மக்களுக்கு தற்போதைய நிலைமை பேரழிவை ஏற்படுத்தி விடும். கர்நாடகத்தில் தென் மேற்கு பருவ மழை சீசன் முடிந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை சீசனில் தமிழகத்தில் அதிக மழை பெய்து தண்ணீர் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

எஸ்.எம். கிருஷ்ணா தற்போது போராட்டம் நடந்து வரும் மாண்டியா மாவட்டத்தில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையில் கர்நாடகத்தைச் சேர்ந்த 4 பேர் மந்திரிகளாக இருக்கிறார்கள். 4 மந்திரிகளும் பிரதமரிடம் நிலைமையை எடுத்துக் கூற தவறி விட்டதாக எடியூரப்பா குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா பிரதமருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

ad

ad