புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012

புலிகளின் சொத்துகளுக்காகவே கே.பி. யை அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது: விக்கிரமபாகு
புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியுமான கே.பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் என்பவரிடம் இருக்கும் புலிகளின் பெருந்தொகையான
சொத்துக்களுக்காகவும் தமக்கு தேவையான புதிய புலம்பெயர் வலயமைப்பொன்றை உருவாக்குவதற்காகவுமே அரசாங்கம் கே.பி. யை பாதுகாத்த வருகின்றது. என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
 

சந்தேகத்தின்பேரில் கைது சொய்யப்பட்ட அப்பாவி இளைஞர் யுவதிகளை எவ்வித விசாரணையுமின்றி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருக்கும் அரசாங்கம் கே.பி. போன்ற புலித்தலைவர்களை பாதுகாத்த வருவதானது அவர்களின் அரசியல் ”யலாபங்களை வெளிச்சம்போட்டு காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேசத்திற்கும் நாட்டு மக்களுக்கும் வழங்கிய உறுதி மொழிகள் எதனையும் இந்த அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றவில்லை. இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ad

ad