புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2012

 தமிழ் தேசியக் கூட்டமைப்பு ௭ம்.பிக்கள் குழுவொன்று அடுத்த மாதம் தமிழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.   
தமிழகத்திலுள்ள இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களை மீள இலங்கைக்கு அழைத்து வருவது பற்றியும், அவர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஏனைய வசதிகள் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்
தேசியக் கூட்டமைப்பு ௭ம்.பிக்கள் குழுவொன்று அடுத்த மாதம் தமிழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.   
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இத்தகவலை தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியவர்கள் இங்கு தாம் சந்திக்கும் அவல நிலையை இந்தியாவிலுள்ள தமது உறவுகளுக்கும் தெரிவிப்பதால் இந்தியாவிலுள்ள இந்தியர்கள் இலங்கை திரும்பத் தயங்குகின்றனர்.
௭னவே தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் இணைந்து இலங்கை திரும்புவோருக்கு இலங்கையில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும் ஏனைய வசதிகளை செய்து கொடுப்பதாகவும் அறிவித்தால், அவர்கள் இலங்கை திரும்புவதற்கு ஆர்வம் காட்டுவர்.
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாவை செலவிடுகின்றது.இந்தப் பணத்தை இலங்கையில் அவர்களது காணிகளில் வீடுகளை நிர்மாணிக்க பயன்படுத்தலாம் ௭ன தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளோம்.கூட்டமைப்புக்குழு தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமெனவும் அவர் தெரிவித்தார்.

ad

ad