புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2012

சிறுவர் காப்பகத்துக்கு எதிராக நோர்வே பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்
நோர்வே சிறுவர் காப்பகத்துக்கு எதிராக நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு முன்பாக
பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
 

நோர்வே நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் (இலங்கை நேரப்படி மாலை 6.30) ஆரம்பிக்கப்படவிருக்கின்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நூற்றுக்கணக்கான பெற்றNhர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் இடம்பெற்ற இலங்கைத் தாய்மாரின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 தினங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே சிறுவர் காப்பகங்களிடமிருந்து தமது பிள்ளைகளை மீட்டுக்கொ
ள்வதற்கும் அதேநேரம் சிறுவர் காப்பகத்தினதும் தமது பிள்ளைகளினதும் நிலைமைகளை நோர்வே அரசுக்கும் நோர்வே மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக் காட்டும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

ad

ad