புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012


ர்

கர்நாடக முதல்வர் இல்லம் முற்றுகை: வாட்டாள் நாகராஜ் கைது

காவிரியில் நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று நிகழ்ந்த முழு அடைப்புப் போராட்டத்தில், வன்முறை ஆங்காங்கே தலைதூக்கியது. மேலும், கர்நாடக முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.
கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னடசேனே தலைவர் குமார், தலித் சங்கர்ஷசமிதி தலைவர் மூர்த்தி உள்ளிட்ட 20 பேர், குமாரகுருபா சாலையில் அமைந்துள்ள கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் "கிருஷ்ணா” இல்லத்தை முற்றுகையிட்டனர். காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். தடைவிதிக்கப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்தியதால், வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  

                                                                          

ad

ad