புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2012


லயனல் மெஸ்சிக்கு மீண்டும் கோல்டன் ஷூ விருது

கடந்த சீசனில், ஐரோப்பாவின் உள்ளூர் கால்பந்து தொடர்களில் அதிக கோல்கள் அடித்ததற்காக, பார்சிலோனா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லயனல் மெஸ்சிக்கு கோல்டன் ஷூ விருது வழங்கப்பட்டது. 25 வயதான மெஸ்சி கோல்டன்
ஷூ விருதை பெறுவது இரண்டாவது முறையாகும். தனக்கு கிடைத்த கோல்டன் ஷூ விருதை, தன்னுடைய அணியின் சக வீரர்களுக்கு மெஸ்சி அர்ப்பணித்துள்ளார். விருது பெற்ற மெஸ்சி கூறுகையில், ‘கோல்கள் அடித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், என்னுடைய அணியினர் இல்லாமல், என்னால் கோல்களை அடிக்க முடியாது’ என்றார். 

பார்சிலோனா அணிக்காக ஆடிவரும் மெஸ்சி, ஸ்பானிஷ் லீக் கால்பந்து தொடரில் மொத்தம் 50 கோல்கள் அடித்திருந்தார். மற்றொரு முன்னணி வீரரும், மெஸ்சியின் போட்டியாளராகக் கருதப்படுபவருமான ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இத்தொடரில் 46 கோல்கள் அடித்து இரண்டாவது இடம் பிடித்தார். 

அர்ஜென்டினா நாட்டு வீரரான மெஸ்சி 2010-ம் ஆண்டு முதன்முறையாக கோல்டன் ஷூ விருதைப் பெற்றார். அப்போதைய சீசனில் அவர் மொத்தம் 34 கோல்கள் அடித்திருந்தார். 2012-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான போட்டியிலும் மெஸ்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை மெஸ்சி தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad