புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2012

கர்நாடக அரசை கலைக்க வேண்டும் - கருணாநிதி

திமுக தலைவர் மு கருணாநிதி காவிரி நதி நீர் ஆணையத்தலைவர் என்ற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்திரவினைப் புறந்தள்ளி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கலைப்பது குறித்து மத்திய அரசு
சிந்திக்கவேண்டுமெனக் கோரியிருக்கிறார்.
செவ்வாய் கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தமிழக விவசாய நிலங்களுக்கு உரிய தண்ணீரைத் தர மறுத்து தாமதம் காட்டி வருவது மட்டுமல்ல, தண்ணீரைக் கேட்கின்ற உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லை என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது இரு மாநில ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பதாகும், தமிழ் நாட்டு மக்களை பகை நாட்டு மக்களைப் போலவும், பன்னெடுங் காலமாக விவசாயத்தையே நம்பி வாழும் தமிழக உழவர் பெருமக்களை பரம்பரை விரோதிகள் போலவும் எண்ணிக் கொண்டு, ஏட்டிக்குப் போட்டியாக கர்நாடக அரசின் நிர்வாகத்தில் இருப்போர் கன்னட மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நிரந்தரமான ஒரு பகையை உருவாக்கும் முயற்சியிலேஈடுபட்டிருப்பது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையே கேள்விக் குறியாக ஆக்கியிருக்கிறது. இந்த நிலைமை வருந்தத் தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத் தக்கதுமாகும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு செயல்பட்டு பிரதமரின் ஆணையையும் மீறும் கர்நாடக அரசிற்குத் தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டியது, இனி எதிர் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்திற்கு துரோகம் இழைக்கிற செயலுக்குமுற்றுப் புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையில், இரு மாநிலத்தாரும் அன்பால் பிணைந்து, சகோதரப் பாசத்தோடு இந்திய ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை கர்நாடக அரசிற்கெதிராகப் பயன்படுத்துவது பற்றி மத்திய அரசு இறுதி முடிவுக்கு வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டு வயல்வெளிகள் மயான பூமிகளாக ஆகி விடக் கூடாது என்பதற்காகவும் கண்ணீரும் கம்பலையுமாக தனது வேண்டுகோளை விடுப்பதாகவும் கருணாநிதி மேலும் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ad

ad