புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2012


கனடாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அவமதிப்பு
கனடாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அவமதிப்புபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தற்போது இவர் தெக்ரிக் - இ- இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அக்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் கனடா தலைநகர் டொரண்டோவில் இருந்து நியூயார்க் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார் தனது கட்சி வளர்ச்சி நிதி திரட்ட லாங் ஐலேண்ட்சிட்டி நகரில் நடைபெறும் விருந்து மற்றும் சொற்பொழிவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். 

டொரண்டோவில், நியூயார்க் விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் திடீரென கீழே இறக்கினர். பின்னர் அமெரிக்கா குடியுரிமை அதிகாரிகளிடம் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் அமெரிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். 

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த வசிகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இம்ரான்கான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அது குறித்து அவரிடம் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். 

தீவிரவாதிகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலை எதிர்ப்பது ஏன்? நீங்கள் தலிபான்களை ஆதரிக்கிறீர்களா? என்பன போன்ற சரமாரி கேள்விகளை கேட்டனர். இந்த தகவலை இம்ரான் கான் தனது டுவிட்டர் இணைய தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், பாகிஸ்தானில் அமெரிக்கா தன்னிச்சையாக தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் ஏற்க முடியாது. அது மிகப் பெரிய குற்றம், மேலும் பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது. எனவே அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து எதிர்ப்பேன் என தெரிவித்துள்ளார்.

ad

ad