புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2012


நீதிவான்கள், மாவட்ட நீதிபதிகள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பு
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாட்டிலுள்ள சகல நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் இன்று திங்கட்கிழமை முதல் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை ௭ன தீர்மானித்துள்ளனர். 
 

இதேவேளை, மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதல் தொடர்பில் மூன்று தினங்களுக்கு விசாரணை நடத்தப்பட்டு முழுமையான அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்கிசை நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ருஷிர வெலிவத்த பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் ஒழுக்கம் மற்றும் சட்டத்தை நிலை நாட்டிவரும் அதிகாரியான நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல் நீதிச் சுதந்திரத்தின் மீது விழுந்த அடியாகும். அதனால் இந்த தாக்குதலை சிறு விடயமென கருத்திற்கொள்ள வேண்டாம் ௭னவும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார். மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதல் தொடர்பில் நீதிவானிடம் தகவலளித்த பொலிஸார் தாக்குதல்காரர்கள், திலகரத்னவின் கையடக்கத் தொலைபேசி மற்றும் மூக்குக் கண்ணாடி போன்றவற்றை ௭டுத்துச் சென்றுள்ளனர் ௭ன குறிப்பிட்டனர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த நீதிவான் இந்த தாக்குதல் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒப்பானது ௭னவும் இதன் விளைவுகளைக் கருத்திற்கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

ad

ad