புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2012


நேருக்குநேர் விவாதிக்க தயாரா?
நடிகர் சரத்குமாருக்கு உதயகுமார் கேள்வி!
கூடங்குளம் அணு உலை பற்றி நேருக்குநேர் விவாதிக்க தயாரா என்று சரத்குமாருக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ் .பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்,

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் கூறியதாவது:

கூடங்குளம் அணுஉலையை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து வருகிறார்கள். ஏதோ, அந்நிய நாட்டு மக்கள் மீது போர்தொடுப்பதைப்போல் படைகளை நிறுத்துகிறார்கள். ஏற்கெனவே, இப்பகுதிகளில் பஸ் போக்குவரத்து கிடையாது. போராட்டத்துக்கு வருவோரை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் காவல்துறை செயல்படுகிறது. ஆனாலும், திட்டமிட்டபடி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்.
ஆயிரக்கணக்கான படகுகளில் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து இப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கிராம மக்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சமத்துவ மக்கள் கட்சியினர் உருவபொம்மை எரிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.
நடிகர் சரத்குமார் ஒரு சமுதாயத்தை சார்ந்து, ஒரு கட்சியை நடத்தி வருகிறார். அச் சமுதாயத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் வணிகர்கள். தற்போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு ஆதரவு அளித்து, அச் சமுதாயத்துக்கு அவர் துரோகம் செய்திருக்கிறார். ஏற்கெனவே விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் அச்சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கூடங்குளம் அணுஉலை முற்றுகை போராட்டத்தின்போது கூடங்குளம், வைராவிகிணறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அப்போது அங்குவந்து அவர்களுக்கு சரத்குமார் ஆறுதல் கூறவில்லை. இப்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாககூறி வருகிறார்.

இந்த பேரணியை அவர் கூடங்குளத்திலிருந்து தொடங்கட்டும். கூடங்குளம் அணுஉலை குறித்து என்னுடன் நேருக்குநேர் விவாதம் நடத்த அவர் தயாரா என்றார்.

ad

ad