புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2012


ஐ.நா செல்லும் டொசோ மாநாட்டு தீர்மானம் - பின்னணியில் இந்திய அரசு
டெசோ' என்ற ஈழ தமிழர் ஆதரவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்வதன் பின்னணியில் இந்திய மத்திய அரசே ரகசியமாகச் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியினால் உருவாக்கப்பட்ட டெசோ' என்ற ஈழ தமிழர் ஆதரவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐ.நா செல்வதன் பின்னணியில் இந்திய மத்திய அரசே இரகசியமாகச் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியாவை, இலங்கை உடனடியாக கைகழுவ வேண்டும்.  இல்லையேல், நாட்டின் எதிர்காலம் சூனியமாகவே அமையும். இதன் உண்மைத் தன்மை காலப்போக்கில் இலங்கை அரசு உணந்து கொள்ளும் என அவர் எச்சரித்துள்ளார்.

'டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. எதிர்வரும் ஆறாம் திகதி ஐ.நாவிடம் கையளிக்கவுள்ளது. அதனை ஐ.நாவிடம் கையளிப்பதற்காக தி.மு.க பொருளாரும் முன்னாள் துணை முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த நிலையில்,  இது தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே குணதாச அமரசேகர இதனை கூறியுள்ளார்.

தமிழ் நாட்டுடனான உறவு இலங்கைக்கு மிகவும் அவசியம் என நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை நாம் நிராகரிக்கின்றோம். தமிழகம் என்பது ஒரு நாடு அல்ல. எனவே, அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

இன்று இந்திய மத்திய அரசு தமிழகத்தைக் காரணங்காட்டி எமது நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றது. இந்தியாவின் சூழ்ச்சியை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். 'டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐ.நாவுக்குச் செல்வதன் பின்னணியிலும் இந்திய மத்திய அரசுதான் ரகசியமாகச் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

ad

ad