புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012


காணாமல் போனவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள்? கொழும்பிடம் நவநீதம்பிள்ளை கேள்வி
இலங்கையில் காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.
வரும் 2013ம் ஆண்டு  மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுக்கு முன்னர் இதற்கான விளக்கத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும் என நவநீதம்பிள்ளை கேட்டுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் அவர் ஜெனீவாவிலுள்ள இலங்கை பிரதிநிதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் காணப்படுகின்றன.
இந்த விடயம் குறித்து இலங்கைக்கு விஜயம் செய்த மனித உரிமைப் பேரவை உறுப்பினர்களும் அரசின் கவனத்துக் கொண்டு வந்திருந்தனர்.
இருப்பினும் இலங்கை அரசு இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது தொடர்ச்சியான மௌனத்தையே கடைப்பிடிப்பதாகவும் அந்தக் கடித்த்தில் நவநீதம்பிள்ளை  இலங்கை அரசைச் சாடியுள்ளார்.

ad

ad