புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012

தற்போதைய செய்தி 
தி . மு . க . இல் பாரிய குழப்பம் ,உயர் மட்டத்துக்குள் பிளவு ,கருணாநிதி தடுமாற்றம் 
ரவு முழுவதும் நான் உறங்கவில்லை.சில கட்சிகளின் தலைமையைப் போல, எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக இருந்தாலும், கண நேரத்தில், கட்டம் கட்டி விடுகின்றனர்-கருணாநிதி
தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும்,(கனி மொழி குரூப் ) டி.ஆர்.பாலு எம்.பி.,க்கும் (ஸ்டாலின் குரூப் ) இடையிலான மோதலை, முடிவுக்குக் கொண்டு வர, கனிமொஹி வீட்டுக்கு பஞ்சாயத்திற்கு வருமாறு, கருணாநிதி விடுத்த அழைப்பை, டி.ஆர்.பாலு ஏற்க மறுத்து விட்டார்.கருணாநிதியின் அனுமதியின்றி, டி.ஆர்.பாலுவை விமர்சித்து, பழனி மாணிக்கம் பேட்டியளித்தாரா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

பிரச்னை களை கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லாத பழனி மாணிக்கம், பத்திரிகைகளுக்கு கொண்டு சென்றதால், தி.மு.க., தலைமை சங்கடத்துக்கு உள்ளானது.
, சி.ஐ.டி., காலனி வீட்டில் பஞ்சாயத்து நடந்தால், ஒரு சார்பாக இருக்கும். அதனால், நான் பஞ்சாயத்துக்கு வர முடியாது. இது, கட்சிப் பிரச்னை. கட்சி அலுவலகமான அறிவாலயத்தில், பஞ்சாயத்தை நடத்தினால் வருகிறேன் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு செக்:
சி.ஐ.டி., காலனியில் நடக்கும் பஞ்சாயத்துக்கு போக வேண்டாம் என, ஸ்டாலின் தரப்பில் விடுக்கப்பட்ட உத்தரவால் தான், பாலு செல்லவில்லை.இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், ஸ்டாலின் கை ஓங்கியிருப்பதை, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்பவில்லை. குறிப்பாக, தங்களது வாரிசுகளுக்கு இளைஞரணியில் பதவி கிடைக்காததால், அதிருப்தியடைந்த இவர்கள், கருணாநிதியிடம் புகார் கூறியுள்ளனர்.அதோடு, அழகிரி, கனிமொழி தரப்பும், இவ்விவகாரத்தில் தங்களின் வருத்தத்தை கொட்டிஉள்ளனர்.

இதனால், ஸ்டாலினுக்கு, செக் வைக்கும் வகையில், கட்சித் தலைவரே, பழனி மாணிக்கம் மூலமாக, இந்த நாடகத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.பழனி மாணிக்கத்தை, டி.ஆர். பாலுவுக்கு எதிராக பேட்டி கொடுக்க வைத்து, அதன் மூலம் பஞ்சாயத்துக்கு இருவரையும் அழைத்து, கட்சியில் தன் செல்வாக்கை நிலை நிறுத்த திட்டமிட்டு, இந்த விவகாரத்தை தலைவர்கிளப்பியுள்ளார் என்ற கருத்து, கட்சி வட்டாரத் தில் உள்ளது.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

என் தூக்கம் போச்சு:
தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., முன்னோடிகள், ஒருவருக்கொருவர் குழு சேர்த்துக் கொண்டு, தஞ்சை மாவட்டத்திலே மோதிக் கொள்கின்றனர் என்ற செய்தி, என்னை சாப்பிட விடாமலும், இரவு முழுவதும் தூங்க விடாமலும் செய்து விடுகிறது.பழனி மாணிக்கம் அளித்த பேட்டி பற்றி, டி.கே.எஸ்.இளங்கோவனும், செல்வமும் என்னிடம் வந்து கூறியவுடன், இன்றிரவு என் தூக்கம் போச்சு என்று கூறினேன். அது போலவே, இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.சில கட்சிகளின் தலைமையைப் போல, எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக இருந்தாலும், கண நேரத்தில், கட்டம் கட்டி விடுகின்றனர்.என்னால், அப்படி கடினமாக இருக்க முடிவதில்லை. அதையே காரணமாகக் கொண்டு, தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கருதினால், பின்னர், நான் என்ன தான் செய்ய முடியும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

ad

ad