புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012

இலஞ்சம் பெறும் முகமாக பெண் ஒருவரை தவறான முறையில் பயன்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தலாவ பகுதியில் வைத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அங்கத்தவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதையல் மூலம் கிடைத்த பொற்காசுகள் எனக்கூறி போலியான உலோக நாணயங்களை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாக அந்த சார்ஜன்ட் கூறியுள்ளார். 


குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்ட் சந்தேக நபரின் மனைவியை அழைத்து ஆசை வார்த்தைகள் பேசி விடுதி ஒன்றிற்குச் செல்ல அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்விதம் இணங்கினால் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக் கொள்ள ஏற்பாடு செய்வதாகவும் கூறி விடுதிக்கு அழைத்துச் சென்ற வேளை முன்னேற்பாடாக ஒழுங்கு செய்யப்பட்டதன் பிரகாரம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் சுற்றி வளைத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

ad

ad