புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2012


ஆந்திர போலீஸ் - தமிழக வக்கீல்கள் மோதல்
பதட்டம் நீடிப்பு
சென்னை ஐசவுஸ் பகுதியை சேர்ந்தவர் உசேன்.  இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் ரகமதுல்லா.  சென்னையில் இருக்கும் தன்னுடைய சொந்த வீட்டை காலி செய்ய முடியாமல் அமைச்சர் ரகமதுல்லா,  உசேனிடம் வருட கணக்கில் போராடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் அரிசி கடத்தல் மற்றும் நகைக்கடையில் கொள்ளை ஆகிய இரண்டு விவகாரங்களில் சென்னையில் இருக்கும் உசேன் பெயர் சேர்க்கப்பட்டது.  இதையடுத்து  ஆந்திராவில் இருந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு சப்- இன்ஸ்பெக்டர் பிடிவாரண்டோடு சென்னைக்கு வந்து உசேனை கைது செய்தனர்.
முறைப்படி அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆந்திராவுக்கு கொண்டு செல்ல முயன்றனர்.  அப்போது உசேனின் வழக்கறிஞருக்கும் ஆந்திர போலீசுக்கும் இடையே  கோர்ட்டில் மோதல் ஏற்பட்டது.  இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

இருப்பினும் உசேன் ஆந்திரா கொண்டு செல்லப்பட்டார்.   இது பற்றி உசேன் தரப்பு கூறும்போது,   வீட்டை காலி செய்வதற்காக ஆந்திர மந்திரியே பொய் வழக்கு போட்டு இப்படி செய்திருக்கிறார் . இதைவிடமாட்டோம் என்றனர்.
எழும்பூர் கோர்ட் வழக்கறிஞர்கள் இதை சாதாராணமாக விடமாடோம்.  நாளை பாருங்கள் என்று கூறினார்கள்.  இதனால்  பதட்டம் நீடிப்பதால் கோர்ட் வளாகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

ad

ad