புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012



தமிழர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்கும் விதமாக சிறிது சிறிதாக தமிழக அரசு முகாம் வாசிகளை விடுதலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக இப்போது மேலும் ஐந்து ஈழத் தமிழர்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர்கள் வருமாறு.
1. ஜெயதாசன் 2. அலெக்ஸ் 3. நாகராசா 4. நர்மதன் 5. சதாசிவன் ஆகியவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நடந்த உண்ணாநிலை போராட்டத்தின் போது காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார் படிப்படியாக முகாம் தமிழர்களை விடுதலை செய்வோம் என உறுதியளித்தார்.
அதன்படி சென்ற மாதம் ஏழு பேர்களையும், இம்மாதம் ஐந்து பேர்களையும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 45 நாட்களில் இதுவரை 16 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்கும் விதமாக சிறிது சிறிதாக தமிழக அரசு முகாம் வாசிகளை விடுதலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக போராடிய அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் முகாம் தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ad

ad